ராணுவம் தாக்கி தமிழர் பலி!! கிளிநொச்சியில் பதட்டம்!!

சிறிலங்கா இராணுவத்தினரின் டிரக் வண்டியொன்று மோதி 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கிளிநொச்சியில் பதற்றமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏராளமான பொலிசாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து டிரக் வண்டியை ஓட்டிச்சென்ற இராணுவ சாரதியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் வழங்கிய வாக்குறுதியை அடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவித்தார். .

கிளிநொச்சியில் 155ம் கட்டை பகுதியில் ஓகஸ்ட் 15 ஆம் திகதியான இன்றைய தினம் புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் டிரக் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் இராணுவ டிரக் வண்டியை செலுத்திவந்த இராணுவ சிப்பாயை தாக்க முற்பட்டதால் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியது.

எனினும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விபத்துடன் தொடர்புபட்ட இராணுவ சாரதியை கைதுசெய்ததுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தனர். இதனையடுத்து பொலிசாரின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் களைந்துசென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்