துருக்கியின் புதிய அறிவிப்பால் தடுமாறும் அமெரிக்கா!

அமெரிக்க இறக்குமதி பொருட்கள் சிலவற்றிற்கு, துருக்கி இரட்டை வரி விதித்துள்ளது. குறிப்பாக கார்கள், மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதே இந்த இரட்டை வரிவிதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமெரிக்காவின் செயற்பாடுகள் காணப்படுவதால், இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக துருக்கியின் துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனதாக தெரிவித்து, அமெரிக்காவின் பாதிரியார் ஒருவர் துருக்கியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை முழுமையாக விடுவித்து நாட்டிற்கு அனுப்ப வேண்டுமென அமெரிக்கா விடுத்த கோரிக்கையை துருக்கி நிராகரித்துள்ளது.

இந்நிலையில், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் இரும்பு உற்பத்தி பொருட்கள் மீது உயர் வரிகளை விதிப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் இச்செயற்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார போரை தோற்றுவிக்குமென துருக்கி தெரிவித்து வந்த நிலையிலேயே இந்த இரட்டை வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
அமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்
பி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*