தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் திரண்ட மக்கள் வெள்ளம்

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் துணையுடன் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தக் கோரி நேற்று பாரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள், அங்கு அரச அதிபரிடம், மனுவொன்றைக் கையளித்தனர்.

அதையடுத்து, மகாவலி அதிகார சபையினால் தமிழர்களின் காணிகள் சிங்களவர்களுக்கு கையளிப்பதை கண்டித்தும், முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

இந்தக் கண்டனப் பேரணி மற்றும் கூட்டத்தில் நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினனர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதகுருமார், பொத அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் என்று, வடக்கின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,
20.10.2018 அன்று பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கிவரும், சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு விழா, கோலாகலமாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*