ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு

திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

திமுகவின் தலைவராக பதவிக்கு ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். திமுக தொண்டர்கள் இதனால் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் கிளர்ச்சி செய்துள்ள அழகிரி மதுரையில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். ஏழாவது நாளாக உரையாடல் நடத்தும் அவர் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.

அதில், திமுகவில் என்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார். கட்சியில் சேர்வது என்றாலே அவரை தலைவராக ஏற்றுகொள்வதுதான். நான் கட்சியில் சேர எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை.

கட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை. இதற்கு என் மகனே பதில் அளித்துவிட்டார். ஆனாலும் அவர்கள் இதை பற்றி யோசிக்கவில்லை.தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். பல என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

வரும் 5ம் தேதி என் பலம் தெரியும். பேரணியின் பின் என்னுடைய பலம் எல்லோருக்கும் தெரியும். பேரணி மிகவும் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கட்சியில் நான் சேர தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் யார் என்று சொல்லமுடியாது.

கட்சியை காப்பாற்றத்தான் இதை செய்கிறேன். கட்சி மோசமான நிலையில் உள்ளது.கட்சியில் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற தயார். எல்லோருடனும் பயணிக்க தயாராக உள்ளேன். அவர்கள்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், என்று அழகிரி கூறியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
அதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால்
சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்