பிரெக்ஸிற் செயற்பாட்டில் சமரசத்திற்கு இடமில்லை – தெரேசா மே

பி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸின் பிரக்சிற் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட திட்டங்களில், பிரித்தானியாவின் தேசிய நலன்சார் திட்டங்கள் எதுவும் இல்லையென்றும் அதனால் பிரசல்ஸூடன் உடன்பட முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்சிற்றிற்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், எதிர்வரும் மாதங்கள் கடினமானதும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாகவும் அமையுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
அமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்
அமெரிக்க இறக்குமதி பொருட்கள் சிலவற்றிற்கு, துருக்கி இரட்டை வரி விதித்துள்ளது. குறிப்பாக கார்கள், மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதே

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*