படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதி கோருவோம் – ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த இனவழிப்புகள் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு. உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்தநாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.

தமிழீழ தாகத்துடனும், இலக்கை நோக்கிய உறுதியுடனும் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் நான்காவது நாளாக நேற்றைய தினம் இரவு நேரம் பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது.
பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் பல்வேறு மாநகர சபையில் சந்திப்புகளையும் , மனுக்கையளிப்பையும் செயற்படுத்தி தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்றத்தை நோக்கி செல்கின்றது.

எதிர்வரும் 09.09.2018 அன்று நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்பாக ஐநா நோக்கிய தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி ஊர்திப்பயணமும் ஆரம்பமாக உள்ளது. இப்பயணம் சுவீடன் , டென்மார்க் , யேர்மனி, இத்தாலி நாடுகளின் தலைநகரங்களை ஊடறுத்து இறுதியாக ஜெனீவா மாநகரத்தை சென்றடைய உள்ளது.

மனித நேய ஈருருளிப் பயணம் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

ஐநா மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு எதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனிவா மாநகரத்தில் நடைபெறும் மாபெரும் பொங்குதமிழ் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு மனிதநேய பணியாளர்கள் உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றார்கள்.

எதிர்வரும் 14.09.2018 அன்று கனடா தேசத்திலும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் கவனயீர்ப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்