ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்கள் இனி என்ன செய்யவேண்டும்?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உடன்பாடற்ற பிரெக்சிற் ஏற்படுத்தப்படும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க பிரித்தானிய சாரதிகள் சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டிய நிலை ஏற்படும்.

உடன்பாடற்ற பிரெக்சிற்கு தற்போது பிரித்தானியா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அவ்வாறு இடம்பெற்றால் ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் எதிர்வரும் 2019 மார்ச் மாத்த்திற்கு பின்னர், ஒன்றியத்தின் வீதிகளை பயன்படுத்த முடியாது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்கும் பிரித்தானியர்கள், தமது சாரதி அனுமதிப்பத்திரம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகின்றது.

மேலும் அடுத்த ஆண்டுக்குள் காலாவதியாகும் கடவுச் சீட்டுக்கள் வைத்திருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக புதிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது பிரித்தானியாவில் உள்ள சில அஞ்சலகங்களில் 5.50 யூரோ கட்டணத்தில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.

உடன்பாடற்ற பிரெக்சிற் எட்டப்படும் போது ஒன்றியத்தின் சலுகைகளை பிரித்தானியா இழக்கும் என்பதனால், உடன்பாடுகளுடனான பிரெக்சிற்றிற்கு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
அமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின்
பி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட
அமெரிக்க இறக்குமதி பொருட்கள் சிலவற்றிற்கு, துருக்கி இரட்டை வரி விதித்துள்ளது. குறிப்பாக கார்கள், மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதே

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*