குழப்பங்களுக்கு த.தே.கூ.வின் தலைமையே காரணம்!

வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமையும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலமைகளும் சரியாகவும், ஜதார்த்தையும் உணர்ந்துகொண்டு செயற்படாமையுமே காரணம் என வட மாகாண சபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சரை சிலர் தங்களுடைய சுயநலன்களுக்காக பயன்படுத்துகிறார்கள். சிலர் தங்கள் சுயநலன்களுக்காகவே அவருடன் ஒட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சரவை குழப்பங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமையும், தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் கட்சிகளின் தலமைகளும் சரியாக அல்லது எதார்த்தத்தை உணர்ந்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது. இன்று கட்சி தலமைகள் தலையிட்டு பிரச்சினையை தீர்க்கும் கட்டத்தை தாண்டி இந்த பிரச்சினை சென்றிருக்கிறது.

மேலும் முதலமைச்சரை சிலர் தங்களுடைய சுயநலன்களுக்காக பயன்படுத்துகிறார்கள். சிலர் தங்கள் சுயநலன்களுக்காக அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனையும் வெளிப்படையாக கூறிய ஒருவன் வடமாகாணசபையில் நான் மட்டுமே.

அந்தவகையில் அமைச்சர் சபை விவகாரத்தை 18 ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்க வேண்டும். காரணம் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு 18 ஆம் திகதிக்கு பின்னர் அது நீதிமன்றத்தின் வழக்காக மாறவுள்ளது. ஆகவே முதலமைச்சர், நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றுக்கு செல்லக்கூடாது என்பதற்காக என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் நிச்சயமாக எடுப்பேன் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்