யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை : என்கிறார் மகிந்த

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ ‘இந்திய – இலங்கை சகோதரத்துவத்தின் எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் தமிழ்மக்களை இலக்கு வைத்து இனவாத யுத்தத்தை மேற்கொள்ளவில்லை எனவும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 பேர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்து பொய்யானது எனவும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 8ஆயிரத்திற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருந்தாகவும் ஆனால் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் போன்று மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லையெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்