இலங்கைக்கு நிதி வழங்கப்படும் போது நிபந்தனைகள் விதிக்கப்படுவதில்லை – சீனா

இலங்கைக்கு நிதி வழங்கப்படும் போது எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீன ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அந்நாட்டு வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜெங் சுவாங் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சீனா இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும்போது எந்த வித அரசியல் நிபந்தனைகளையும் விதிப்பதில்லை. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் பிராந்திய வளர்ச்சிக்கு தொடர்ந்தும் உதவும்.

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் இரு நாடுகளிற்கும் மக்களுக்கும் பலன் அளித்துள்ளது.

சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்கவில்லை என சில நாட்களிற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதையும் அவர் இதன்போது வரவேற்றுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை
“தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்க்கமான
யாழ்ப்பாணத்தில் ஏட்டிக்கு போட்டியாக நடந்துவரும் குழு மோதல்களின் தொடர்ச்சியாக திருநெல்வேலி கொக்குவில் கருவப்புலன் வீதியில் வீட்டினில் தரித்திருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்படடுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*