இந்தியர் மீது பாய்ந்த பயங்கரவாத தடைச்சட்டம் – 3 மாதம் விளக்கமறியல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியக் குடிமகனை, 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கோட்டே நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தப் படுகொலைச் சதித் திட்டம் குறித்து வெளிப்படுத்திய நாமல் குமாரவின் இல்லத்துக்கு அடிக்கடி சென்றார் என்ற குற்றச்சாட்டில் கேரளாவைச் சேர்ந்த மர்சிலி தோமஸ் என்ற இந்தியர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 3 மாதங்கள் அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அனுமதி கோரப்பட்டது.

இதற்கு அனுமதி அளித்த கோட்டே நீதிவான், எதிர்வரும் 23ஆம் நாள் இந்தியக் குடிமகனை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்