28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே, 28 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

1.2 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும், அமைக்கப்படும்.

இந்தியாவின் என்டி என்டர்பிரைசஸ், சிறிலங்காவைச் சேர்ந்த யப்கா டெவலப்பேர்ஸ், மற்றும் ஆர்ச்சிடியம் நிறுவனம் ஆகியனவே இந்த வீடுகளை அமைக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளன.

முன்னதாக, சீன நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, இந்தப் பணி இந்திய – சிறிலங்கா நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்