தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்ரெம்பர் மாதம், நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரான, முன்னாள் போராளி, கந்தையா பிரபாகரன் என்பவரையே பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் உள்ள இவரது வீட்டுக்கு நேற்றுச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வரும் 29ஆம் நாள், விசாரணைக்கு வருமாறு அழைப்பாணையை கொடுத்துள்ளனர்.

எனினும், இந்த அழைப்பாணையில் காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

தொடர்டர்புடைய செய்திகள்
உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன்
தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள்,
நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்