விக்கியுடன் இணைய தயார் பச்சை கொடி காட்டினார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தமிழ் மக்கள் கூட்­டனி என்ற புதிய அர­சியல் கட்சி ஒன்­றினை ஆரம்­பித்­துள்ள நிலையில் புதிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது குறித்து ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­விக்கையில் தமிழ் மக்­க­ளுக்­கான மாற்றுத் தலைமைத் ­து­வமே இன்­றையகால­ கட்டத்தின் தேவை­ யாகும். அதற்கான சரி­யான களம் அமைந்­ துள்ள நிலையில் விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் இணைந்து பய­ணிக்க தயா­ராக உள்­ள­தாக குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் தலை­மை­யுடன் இணைந்து செயற்­பட ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி தயா­ரா­கவே உள்­ளது. அதேபோல் தமிழ் மக்கள் பேர­வையும் புதிய கூட்­ட­ணி­யுடன் இணைந்து பயணிக்கும். எமது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விக்கினேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வடக்கு கிழக்கில் பலமான தமிழர் கட்சியினை உருவாக்குவோம் .மேலும் அவர் முன்­வைத்த கொள்­கைகள் கூற்­றுகள் என அனைத்­துமே தமிழ் மக்­களின் நியா­ய­மான நிலைப்­பா­டாக உள்­ளன. இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையில் சுயாட்சி கொள்­கையை அவர் ஆழ­மாக வலி­யு­றுத்­தி­யுள்ளார். இதுவே எமதும் ஒரே நோக்­க­மாகும். அவ்­வா­றான நிலையில் விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் இணைந்து பய­ணிப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமையும் என நாம் நினைக்­கின்றோம்.

முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பித்­துள்­ளயை நாம் வாழ்த்­து­வ­துடன் வர­வேற்­கின்றோம். இன்­றைய கால கட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்­கான சரி­யான தலைமை ஒன்று இல்­லாத நிலையில் மாற்று தலை­மைத்­துவம் ஒன்­றினை தமிழ் மக்கள் எதிர்­பார்த்து நிற்­கின்­றனர். இந்­நி­லையில் வடக்கு மாகா­ண­ச­பையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தமிழ் மக்கள் கூட்­டணி என்ற புதிய கட்­சியை உரு­வாக்­கி­யுள்­ளதை ஆரோக்­கி­ய­மான ஒன்­றா­கவே நாம் கரு­து­கின்றோம் என சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்