அனைவரும் சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பிரதமராக நேற்று மாலை மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின், கீச்சகப் பக்கத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

”சிறிலங்காவின் நிகழ்வுகளை அமெரிக்கா அவதானித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து தரப்புகளும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுமாறும், வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்றுமாறும், நாம் அழைப்பு விடுகிறோம்.

சிறிலங்கா அரசாங்கம், ஜெனிவாவில் அளித்த மனித உரிமைகள், மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை நிலைநாட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

எனினும், சிறிலங்காவின் புதிய பிரதமராகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவருக்கு வாழ்த்துக் கூறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்