நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்! இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும்! ஐரோப்பி ஒன்றியம் எச்சரிக்கை!

கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிருக்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை கூட்டி வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கையை நிரூபிக்க தேவையான நடவடிக்கை எடுப்பதே தற்போது அவசியமானது என சர்வதேச சமூகம் வலியுறுத்த தொடங்கியுள்ளது.இல்லாவிடின் , நாட்டின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு, முதலீட்டாளர்களையும் இழக்க நேரிடுமெனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பின் படியே கூட்டமைப்பு நாடாளுமன்றில் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை எடுத்திருந்ததாக சொல்லப்படுகின்றது.

ஆயினும் சர்வதேச கருத்துக்களை புறந்தள்ளி மைத்திரி நாடாளுமன்றினை கூட்ட மறுத்துவருகின்ற நிலையில் ஜரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்