தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி ?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு வந்துள்ளதாக நம்பகரமாக அறிய முடிந்துள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சித்தபோதும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியற்றவர் எனக் கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுரேஸ் பிரேமச்சந்திரனை சம பங்காளராக புதிய கூட்டில் இணைத்துக்கொண்டால் தமிழ் மக்கள் கூட்டணியுடனான தேர்தல் கூட்டிற்கு உடன்படப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிபந்தனை விதித்துவந்தது.

எனினும் சுரேஸ் பிரேமச்சந்திரனை இணைத்துக்கொள்வதில் விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையிலே அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தனித்தே போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வந்திருப்பதாக நம்பகரமாக அறியமுடிந்துள்ளது.

இது தொடர்பில் நேற்று கட்சித் தலைமையகத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடி கலந்துரையாடியதாகவும் அது தொடர்பிலான தலைமையின் நிலைப்பாடுகளை அறிவிக்கும்பொருட்டு இன்று யாழ் நகரில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பினை மேற்கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்