மன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையின் பெறுமதி சுமார் 50 லட்சம் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படை அதிகாரிகள் சிலர் தலைமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற வேளை கரைக்கு அருகில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா தொகை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.

கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா தொகையை கடற்படையினர், மன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.
மன்னார், காக்கையன்குளம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு

About இலக்கியன்

மறுமொழி இடவும்