பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு!

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்பிற்கு முரணானது என 122 பேர் கையொப்பமிட்ட ஆவணத்தின் பிரதியும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கிணங்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்