அமெரிக்க கூட்டுப்படைத் தாக்குதலில் 6 கிளர்ச்சியாளர்கள் உயிரிழப்பு!

அமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியா நாட்டின் ஹரதரே பகுதியில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா இன்று (வியாழக்கிழமை) வான்வெளித் தாக்குதல் நடத்தியது.

இதன்போது சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்களே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

அத்துடன் குறித்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்களின் செயற்பாடுகள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதற்கு ஆதரவாக அமெரிக்க இராணுவமும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்