சிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்!

ரணிலுக்கு ஆதரவு கோரும் சத்தியக் கடிதாசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைஒப்பமிட்டுள்ள நிலையில் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை கருதியே வேறு வழியின்றி அதில் கைஒப்பமிட்டதானதுமான செய்தி ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கசியவிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் வெளிப்படையகவே நிபந்தனையற்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்துவருகிறது. ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவி பறிக்கப்படும்வரை ஆட்சி குழம்பினால் தீர்வுகிடைக்காது போய்விடும் என்பதால் ரணிலுக்கு ஆதரவளிக்கின்றோம் என காரணம் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது மகிந்த சட்டவிரோதமாக பதவியேற்றுவிட்டார் அதனால் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ரணிலுக்கு ஆரவளிக்கிறோம் என காரணம் கூறிவருகின்றது.

ரணில் ஆட்சியின்போதான வரவுசெலவுத்திட்டத்திலிருந்து அனைத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகள் ஏதுமின்றி கை உயர்த்தி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த போது மௌமாக கை உயர்த்திவந்த நாடாளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தற்போது மக்கள் மத்தியில் தமக்கு எதிராக அதிருப்பி அலைகள் தோற்றம்பெற்றுள்ள நிலையில் ரணிலுக்கு ஆதரவளிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூட்டமைப்பின் ஒன்றுமை சீர்குலைந்துவிடக்கூடாது என்பதால் வேறு வழியின்றியே தான் ரணில் விக்கிரமசிங்கவை நிபந்தனையற்று ஆதரவளிப்பதாகவும் வெளியில் தகவல்களைப் பரப்பவிட்டுவருகின்றார்.

இதன் ஒரு அங்கமாகவே நேற்று ரணிலை பிரதமராக்கக் கோரும் சத்தியக்கடிதாசியில் கைஒப்பமிட தான் மறுத்து சம்பந்தனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக திட்டமிட்ட தகவல் ஒன்றை வெளிக்கசிய விட்டுள்ளார்.

இதேவேளை ரணிலைப் பிரதமராக்கக் கோரி வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்தில் நடைபெறும் பேச்சுக்களில் சிறிதரன் பங்கேற்றுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்