இரணைப்பாலையில் கண்ணீர் வெள்ளத்தில் நடைபெற்ற மாவீரர்நாள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரணைப்பாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சுருகி மாவீரர்களை நினைவிற்கொண்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப்பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களின் பொது நினைவாக கல்லறை அமைக்கப்பட்டு பொதுச்சுடர் வைக்கப்பட்டு அந்தப்பகுதியில் புதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக பந்தங்கள் ஊண்டப்பட்டு மாவீரர்களின் பெயர் பொறிக்கப்ப்பட்ட படங்கள் வைக்கப்பட்டு அருகில் கமுகம் கன்றும் வைக்கப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் ஏற்பாட்டுக்குழுவினாரல் வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.

சரியாக 6.05. மணிக்கு பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயார் மரியதாஸ் மேரிமெற்ரலின் அவர்கள் ஏற்றிவைத்துள்ளதை தொடர்ந்து மாவீரர்களின் மாதிரி நினைவு இடங்களில் பெற்றோர்கள் உறவினர்கள் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

மூவாயிரம் வரையான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்