நான்கு வருட ஆட்சியில் ரணில் எதனைப் பெற்றுத்தந்தார் ? – சிவாஜி கேள்வி

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நல்லாட்சி அரசு என்று பெயர் சூட்டி கொண்டாடிய நாம் இதுவரையான நான்கு ஆண்டுகளில் அந்த அரசாங்கத்திடமிருந்து தமிழர்களின் நலனுக்காக பெற்றுக்கொண்டது என்ன என லெரோ கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த ரெலோ கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அப்படிப்பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உருவாகியும் ஒருமாதத்தில் நான்கு வருடமாகின்றது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கி இதுவரை எதையும் சாதித்ததில்லை. ஜனாதிபதி மைத்திபால சிறிசேன எங்களை ஏமாற்றிவிட்டார் எனக் கூறினால் ரணில் விக்கிரமசிங்கவும்தான் ஏமாற்றிவிட்டார் என்று கூறவேண்டும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடனான பெரும்பான்மை அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தது. அதன்போதே தமிழர்களுக்கு நியாமபூர்வமான தீர்வு எதனையும் வழங்காத ரணில் விக்கிரமசிங்க தற்போது அவருக்கு நிபந்தனையற்று ஆதரவளிப்பதால் எமக்கு எதனைத் தந்துவிடப் போகிறார் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்