இந்தியாவின் தாளத்திற்கே கூட்டமைப்பு ஆடுகிறது

ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளா் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.

சமகால அரசியில் நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ரணிலை ஆதரிக்கும் முடிவை எடுக்கின்ற போது அக் கட்சியின் 14 பேருமாகவே முதல் இரண்டு தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றார்கள்.

இதில் மூன்றாவது தடவையாக சத்தியக் கடதாசியும் வழங்கியிருக்கின்றார்கள். ஆனால் அந்த சத்தியக் கடதாசி வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எதிரப்பு தெரிவித்தாதகவும் பின்னர் சம்மந்தரின் முகத்திற்காக

அவரும் அதனை ஆதரித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆயினும் அதில் என்னைப் பொறுத்தரைவயில் சிறிதரனுடைய நிலைப்பாடும் சம்மந்தனின் நிலைப்பாடும் ஒன்று தான்.

ஆனால் அந்த நிலைப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வருகின்ற பொழுது தாங்கள் அதனைச் சமாளிக்க முடியாமலேயே அவ்வாறான ஒரு கருத்தையும் மக்கள் மத்தியில் பரப்பியிருக்கின்றனர்.

ஆகவே யாருமே மக்கள் நலனைக் கருத்திற் கொள்ளவில்லை என்பது மட்டும் தெட்டத் தெளிவாகப் புலப்படுகின்றது. ஆகையினால் இவர்கள் அனைவரும் ஒன்று தான்.

குறிப்பாக தமிழர்களின் தயாகம், தேசியம், சுயநிர்ணயத்தைக் கைவிட்டு ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு தற்போது இவர்கள் பயணிக்கின்றார்.

அதிலும் ரணில் விக்கிரமசிங்க கூட புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி என்று தான் சொன்ன போதும் அதனையும் ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் ஏற்றக் கொள்ளாதவற்றை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரால் செய்து வருகின்ற கூட்டமைப்பினர் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

அதிலும் இவை எல்லாவற்றுக்கும் சம்மந்தரோடு இணைந்து ஆதரவை வழங்கி ஆதாித்துச் செயற்பட்டு வருகின்ற சிறீதரன் இப்போது புலம்புவது என்பது மக்களை ஏமாற்றும் நாடகம் தான்.

இந்தியா மேற்கு நாடுகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டுமென்று சொன்னதன் அடிப்படையில் தான் கூட்டமைப்பினர் ரணிலுக்கு ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.

ஆனால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் சர்வதேசத்தை தமிழ் மக்களின் நலன்களக்காக பயன்படுத்தியிருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை நடாத்தி அழுத்தங்களைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் வெறுமனே ரணிலுக்கு ஆதரவு என்ற அடிப்படையில் அவை எதனையும் செய்வதற்கு கூட்டமைப்பு தவறியிருக்கின்றது. ஆனால் சிங்களக் கட்சிகளில் கட்சிகளைப் பொறுத்தவரையில் அது சுதந்திரக் கட்சியாக, ஐக்கிய தேசியக் கட்சியாக ,பொதுஐன பெரமுனவாக, ஜே.வி.பியாக இருக்கலாம் அது யாராக இருந்தாலும் தமிழர்களுக்க எதுவுமே செய்யமாட்டார்கள் எதனையுமே கொடுக்க மாட்டார்கள்.

அவ்வாறு எதனையும் செய்வதற்கு கொடுப்பதற்கும் அவர்கள் இன்று வரையில் தயாராக இல்லை. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க உட்பட அவர்களுடன் இருக்கின்ற எவருமே தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதற்குத் தயாராக இல்லை.

இது தான் உண்மை அப்படிப்பட்ட ஒரு இடத்தில் நாங்கள் ரணிலிடம் வாக்குறுதி பெற்று வைத்திருக்கின்றோம் என்று சொல்வதெல்லாம் எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கான நடாகமே தவிர வேறேதும் இல்லை.

அதேவேளை அவர்கள் ஒருபோதும் தாமாகவும் விரும்பி எதனையும் தரப்போவதுமில்லை. மேலும் ஓழித்து மறைத்து ரணில் தானாக எதனையும் தரப்போவதுமில்லை. இது தான் வரலாறு என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்