நள்ளிரவில் வெள்ளை வானில் ஏற்றிச்செல்லப்பட்ட முன்னாள் போராளியின் குடும்பம்!

நாளை உங்களது கணவருக்கு பிணை வழங்க ஏற்பாடுசெய்கிறோம் நீங்கள் உங்களது கைக்குழந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு வீட்டிற்கு செல்லுங்கள் எனக் கூறி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உண்ணாவிரதப் போராடடத்தில் ஈடுபட்டுவந்த முன்னாள் போராளியின் குடும்பத்தை நடுஇரவில் வெள்ளை வேனில் ஏற்றிச் சென்ற சம்பவம் நேற்று(17) நடைபெற்றுள்ளது.

தனது 04 பிள்ளைகளுடன் நேற்றுக் காலை முதல் தனது கணவரை விடுதலைசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் பிள்ளைகளை நள்ளிரவில் வந்த மட்டக்களப்பு மாநகர மேயர் மற்றும் பொலீசார் நாளை உங்களது கணவரை பிணையில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்கிறோம் உங்களது பிள்ளைகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறி மாநகரசபையின் வெள்ளை வேனில் ஏற்றி பொலீசாரின் பாதுகாப்புடன் தாண்டியடியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு போய் விட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் மூலம் குறித்த குடும்பத்திற்கான நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அஜந்தனை விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை தான் பொறுப்பேற்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த குடும்பத்தின் போராட்டத்தை மாநகரமேயர் அவர்கள் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி செல்வராணி அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று காலை முதல் நள்ளிரவுவரை ஈடுபட்டுவந்த நிலையிலேயே நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி செல்வராணி அவரது ஐந்து பிள்ளைகளுடன் தனது கணவருக்கும் பொலீசார் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவ்வாறு தொடர்பு இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று கொடுக்குமாறும்

தங்களது ஐந்து பிள்ளைகளுடன் கடந்த 18 நாட்களாக உணவுக்கு வழியின்றி கஷ்டத்தில் உள்ளதாகவும் தனது கணவரை அரசாங்கம் விடுதலை செய்யாவிட்டால் தான் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறி ஊண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்