ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்!

விரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தங்களை ஆட்சியமைக்க இடமளிக்கவில்லை. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நான், பிரதமராக பதவியேற்றபோது அதனைச் செய்தேன்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது ஆசனங்கள் நிலையானவை என நம்பியிருக்க கூடாது நாங்கள் விரைவில் மீண்டும் ஆட்சியை கவிழ்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் போராட்டங்கள் நடக்கும் ஆட்சி பறிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சதிப்புரட்சி மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

வரியை அதிகரிக்கும் போதும் விலைகளை அதிகரிக்கும் போதும், பட்டினியில் இருக்கும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும்.

சர்வதேச நாணய நிதியம் கூறுவதை மட்டும் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அத்துடன், ஒருவேளையேனும் உணவு உட்கொள்ளாமல் இருப்பவர்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

வரி விதிப்பானது எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடியவகையில் அமைந்துள்ளது இந்நிலையில் மேலும் வரி விதிப்பை அதிகரித்தால் மேலும் வாழ்வாதாரம் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

குறித்த நிலையை மாற்றி புதிய அரசாங்கத்தை உருவாக்க ஐ.தே.க இடமளிக்கவில்லை என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டை பாதுகாப்பதற்கு தேவை ஏற்படும் போது நாங்கள் வருவோம் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்