ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு!

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் என்றுமே இணையாது. அப்படி இணையவும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் 90 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அப்படி அதிமுகவில், அமமுக இணைவது தற்கொலை முயற்சி ஆகும்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு. பாஜகவிற்கு எதிராக வலுவான அணி உருவாகக்கூடாது என்பதற்காகத் தான் ஸ்டாலின் இவ்வாறு செய்கிறார். ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.

என் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம். அதனால் எந்த நிலையிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை. அமமுகவின் வளர்ச்சியை பிடிக்காத எதிரிகள் நான் பதவி விலகுவதாக பொய் பரப்புரை செய்கின்றனர்.

அரசியலில் தவறான முடிவெடுக்கும் கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும். தேமுதிக அப்படித்தான் வீழ்ந்தது என கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்