வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது!

வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் நேற்று மாலை தெரி­வித்­தது.

புதுக்­கு­டி­யி­ருப்பு, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் கடந்த 21ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை முதல் கடும் மழை பெய்து வரு­கி­றது. கடந்த 22ஆம் திகதி இர­ணை­ம­டுக் குளத்­தின் அனைத்து வான் கத­வு­க­ளும் திறந்து விடப்­பட்­டன. இத­னால் கிளி­நொச்­சி­யில் மிகப்­பெ­ரும் வெள்ள இடர்ஏற்­பட்­டது. அதைத் தொடர்ந்து பெய்த கடும் மழை கார­ண­மாக நிலமை நாளுக்­கு­நாள் மோச­மாகி வந்­தது. நேற்று மாலை நில­வ­ரப்­படி 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் தெரி­வித்­தது.முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் மழை தொடர்­கின்­ற­மை­யா­லும் கிளி­நொச்சி இர­ணை­ம­டுக் குளத்­தின் 9 வான் கத­வு­கள் நேற்­றும் திறந்த விடப்­பட்­டுள்­ள­மை­யா­லும் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை இன்று அல்­லது ஓரிரு தினங்­க­ளில் ஒரு லட்­சத்­தைத் தாண்­டும் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முல்­லைத்­தீவு
ஒட்­டு­சுட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வில் ஆயி­ரத்து 488 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 4 ஆயி­ரத்து 774 பேர் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­லர் பிரி­வில் 4 ஆயி­ரத்து 755 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 15 ஆயி­ரத்து 138 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். துணுக்­காய் பிர­தேச செய­லர் பிரி­வில் 331 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 4 பேர் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லர் பிரி­வில் ஆயி­ரத்து 291 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 4 ஆயி­ரத்து 413 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மாந்தை கிழக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 409 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 467 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். வெலி­யோயா பிர­தே­சத்­தில் இருந்­தும் மக்­கள் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர். அங்கு 8 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 19 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். முல்­லைத்­தீ­வில் மொத்­த­மாக 8 ஆயி­ரத்து 282குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 26 ஆயி­ரத்து 815 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மாவட்­டத்­தில் 85 வீடு­கள் முழு­மை­யா­க­வும், ஆயி­ரத்து 754 வீடு­கள் பகு­தி­ய­ள­வி­லும் ­­சேத­ம­டைந்­துள்­ளன.

கிளி­நொச்சி
கரைச்­சிப் பிர­தேச செய­லர் பிரி­வில் 3 ஆயி­ரத்து 624குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 11 ஆயி­ரத்து 986 பேர் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். பிர­தே­சத்­தில் வெள்­ளத்­தால் 20 வீடு­கள் முழு­மை­யா­க­வும் 99 வீடு­கள் பகு­தி­ய­ள­வி­லும் ­­னசேத­ம­டைந்­துள்­ளன.
கண்­டா­வளை பிர­தேச செய­லர் பிரி­வில் 7 ஆயி­ரத்து 665 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 24 ஆயி­ரத்து 980 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். பிர­தே­சத்­தில் வெள்­ளத்­தால் 3 வீடு­கள் முழு­மை­யா­க­வும் 141 வீடு­கள் பகு­தி­ய­ள­வில் சேத­ம­டைந்­துள்­ளன. பச்­சி­ளைப்­பள்­ளிப் பிர­தேச செய­லர் பிரி­வில் 2 ஆயி­ரத்து 188 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 7 ஆயி­ரத்து 179 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். பிர­தே­சத்­தில் வெள்­ளத்­தால் 109 வீடு­கள் பகு­தி­ய­ள­வில் சேத­ம­டைந்­துள்­ளன. கிளி­நொச்சி பூந­க­ரிப் பிர­தேச செய­லர் பிரி­வி­லும் பாதிப்­புக்­கள் ஏற்­பட்­டுள்­ளன. அங்கு 2 ஆயி­ரத்து 599 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 6 ஆயி­ரத்து 143 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இரண்டு வீடு­கள் முழு­மை­யா­க­வும், 172 வீடு­கள் பகு­தி­ய­ள­வி­லும் ­­னசேத­டைந்­துள்­ளன.

மன்­னார்
மன்­னார் நகர் பிர­தேச செய­லர் பிரி­வில் 27 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 85 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். நானாட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வில் காற்­றின் தாக்­கத்­தால் 12 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 56 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணம்
மரு­தங்­கேணி பிர­தேச செய­லர் பிரி­வில் 4 ஆயி­ரத்து 257 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 12 ஆயி­ரத்து 642 பேர் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வவு­னியா
வவு­னியா வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 152 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 516 பேர் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்