வெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சிறீலங்கா பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடிவரும் நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக, இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22569 குடும்பங்களைச் சேர்ந்த 70650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1642 குடும்பங்களைச் சேர்ந்த 5379 பேர் 17 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9574 குடும்பங்களைச் சேர்ந்த 30499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1566 குடும்பங்களைச் சேர்ந்த 4889 பேர் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்