சிறீலங்கா இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்!

இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமை என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திடீரென்று வந்து தமிழ் மக்களுக்கு அபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமுமில்லை. இதைக் கூட மக்களுக்கு செய்யாது எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் போய் அரசாங்கம் கூற போகும் பதில் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

இலங்கை இராணுவம் எச்சந்தர்ப்பத்திலும் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் அர்த்தமில்லை. நான் 2013 ஆம் ஆண்டிலிருந்து இராணுவத்தை வட பகுதியிலிருந்து வெளியேறச் சொல்லி வருகின்றேன். ஆனால் இராணுவம் மக்களுக்கு பொம்மைகளையும் பொருட்களையும் கொடுத்து இங்கு தங்கியிருக்கப் பார்க்கின்றார்கள்.எனத் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்