லக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது

இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் நவநீதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈழத் தமிழர்கள் விடுதலைக்கான போரை நடத்திய போது சிங்கள அரசில் அமைச்சராக இருந்து கொண்டு புலிகளை ஒடுக்க தீவிரம் காட்டியவர் லக்ஸ்மன் கதிர்காமர். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து புலிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் முனைப்பு காட்டினார்.

கடந்த 2005-ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் சிங்கள அரசுடன் இணைந்து செயற்பட்ட ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா மீதும் கொலை முயற்சி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த இரு தாக்குதல்களிலும் தொடர்புடையவர் என கூறி ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நவநீதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்