அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார்

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவுதினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 43 தமிழ் ஊடகவியலாளர்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்த சிங்கள ஊடகவியலாளர்களும் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க போருக்கு எதிரானவர் என்ற காரணத்தினாலேயே அவரது படுகொலை தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதன்போது குற்றம் சுமத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்