கடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்

திருகோணமலை – கிண்ணியாவில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, ஆற்றில் குதித்த இருவர் உயிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றுக்காலை மகாவலி ஆற்றில் சட்ட விரோமாக மண் அகழ்ந்து கொண்டிருந்தவர்கள் மீது கடற்டையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அவர்கள் ஆற்றில் குதித்தனர்.

அவர்களில் இருவர் காணாமல் போயினர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்துல் ராவூப் முகமட் பாரிஸ் (22), பசீர் முகமட் ரமீஸ் (19) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கடற்படையினரை ஆவேசமாகத் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பத்தில் 12 கடற்படையினர் காயமடைந்தனர் என்றும், அவர்களின் 4 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர் என்றும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது,

இந்தச் சம்பவத்தினால் அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது. சிறிலங்கா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்