ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்!

சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

டி.எப். 26 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது.

3 ஆயிரம் கிலோ மீற்றர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீற்றர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது.

தரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி.எப்.26 ஏவுகணையை செலுத்த முடியும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்