தமிழர் வரலாற்றையும் – தமிழீழ அரசின் வரலாற்றையும் பாதுகாப்போம்.

தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக எமது விடுதலை இயக்கமாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் -போராட்ட வரலாறுகள் என்பன திட்டமிட்ட வகையில் மிக விரைவாக அழிக்க பல முயற்சிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஓலைச்சுவடிகள் அழிப்பில் தொடங்கி யாழ்நூலகம் எரிக்கப்பட்ட பின்னரும் தமிழர் வரலாறு அழிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. இதைக் கருத்திற் கொண்டுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழர் வரலாற்றையும் – விடுதலைப்போராட்ட வரலாற்றையும் ஆவணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதற்கேற்ப பிரிவுகளை உருவாக்கி ஆவணப்படுத்தும் வேலையை செயற்படுத்தினார்.

இன்று சமூகவலைத்தளங்களில்(யூடியூப்-முகநூல் – கூகிள்) உள்ள இயக்க வரலாறு-தேசியத் தலைவரின் பேச்சுகள் மற்றும் காணொளிகள் என்பன சத்தமின்றி விரைவாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறன. இதேபோல் இணையங்களில் உள்ள இயக்க வரலாறுகளும்-தமிழர் வரலாறுகளும் வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன்பின்னனியில் சிங்கள அரசு இருப்பதோடு தமிழின அழிப்பின் தொடர்ச்சியாக இவ்வழிப்பு வேலையை மேற்கொண்டுவருகிறது.இது மட்டுமல்லாமல் இன்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் இயக்க வரலாறுகள்,தமிழன அழிப்பின் பதிவுகள் என்பன போட்டி பொறாமையால் எம்மவர்களாலேயே முடக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.இது எம்மினத்துக்குப் பெரும் பின்னடைவைத் தருகின்றது என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.எனவே வரலாற்றை தொகுக்கும் பணி ,அதனை பாதுகாக்ககும் பணி என்பன ஒரு குழுவோஇதனிநபர்களோ மட்டும் செய்யும் பணியல்ல. இது ஒட்டுமொத்தத் தேசிய இனத்தின் வரலாற்று பணி.இவ்வரலாற்று பணியினை அறிஞர்கள்இஆய்வாளர்கள்,தேசிய செயற்பாட்டாளர்கள்இபோராளிகள்,உணர்வுள்ள அனைவரும் இணைந்து இவ்வரலாற்றுப் பணியினை விரைந்து முன்னெடுக்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.

இன்று நடந்து கொண்டிருக்கும் தமிழின வரலாற்று அழிப்பு பற்றி கண்டுகொள்ளாமல் கடந்து செல்வோமானால் உண்மையான வரலாற்றை இழந்த இனமாக நாம் நிற்போம்.

எனவே இவ்வரலாற்று கடமையினை எம்முன்னே உள்ள பிரிவினைகளை கடந்து ஒற்றுமையுடன் சிங்கள அரசின் தமிழின வரலாற்று அழிப்பு நிகழ்ச்சி நிரலை முறியடிக்க உறுதியெடுப்போம்.

மாவீரர்களை
நெஞ்சிலேந்தி பயணிப்போம்……
வரலாற்றை படி..
வரலாற்றை மீட்டெடு.
வரலாற்றை பாதுகார்…

About இலக்கியன்

மறுமொழி இடவும்