போர்குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும் ஆணையாளர் பரிந்துரை

போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகதத்தன்மையான உள்ளக விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தொடரும் நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது இலங்கை தொடர்பான அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறது.

” இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ” என்ற தா;தலைப்பிலான இந்த அறிக்கை நேற்று கசியவிடப்பட்டது. இந்த அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் மனித உரிமைகள் சபைக்கு எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி வழங்கப்படும்.

இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம், ஐ. நா மற்றும் உறுப்பு நாடுகளுக்கான பரிந்துரைகளை கொண்டிருக்கிறது.

சித்திரவதை, வலிந்து காணாமல் செய்யப்படுதல், போர்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை குறிப்பாக சர்வதேச நியாயாதிக்க கோட்பாடுகளுக்கு அமைவாக விசாரணை செய்து வழக்கு தொடரநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது கடந்த கால மனித உரிமைகள் மீறல்களை கையாளும் இலங்கையர்களின் முயற்சிகளுக்கு உறுப்பு நாடுகள் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் பொருட்டு போதிய முறைமைகளை உருவாக்க உதவவேண்டுமென்றும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

அத்துடன், இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிப்பதற்கும், ஐ.நா மனிதஹ் உரிமைகள் ஆணையாளர், மனித உரிமைகள் சபை , மற்றும் ஏனைய மனித உரிமைகள் பொறிமுறைகள் ஆகியவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்றும்பொருட்டும் ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஐ. நா மனித உரிமைகள் அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்