“கால நீடிப்பு வேண்டாம்” முன்னணியின் பிரேரணையும் ஆர்னோல்டால் நிராகரிப்பு!

இறுதிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு நீதி கோரிய விசாரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என்றும் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட விசேட பிரேணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என ஈபிடிபி மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏப்படுத்திய நிலையில் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே முதல்வர் ஆர்னோட்டினால் குறித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (12.03.2019) செவ்வாய்க்கிழமை யாழ் மாநகரை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது ரெலோ உறுப்பினரான துணை முதல்வர் துரைராசா ஈசன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவயைில் இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது எனக் கோரி தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்றைய அமர்வின் விடையப்பபிற்குள் சேர்க்கப்படாது குறித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டது என கோரினார்.

அதனையடுத்து சபையில் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூடி எடுக்கப்பட்ட தீர்மானம். எனவே இந்தப் பிரேரணையை ஏற்க முடியாது என முதல்வர் ஆர்னோல்ட் நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் யாழ் மாநகரசபையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டவகையில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி தம் ஊடாக சர்ப்பிக்கின்ற பிரேரணையை ஏற்று விவாதிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விவாதம் செய்தனர். அதனை உணவு இடைவேளையின் பின் விவாதிக்கலாம் என முதல்வர் ஆர்னோலட் வாக்குறுதியளித்திருந்தார்.

அதனையடுத்து இறுதிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு நீதி கோரிய விசாரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என்றும் கோரிய பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான கிருபாகரன் எடுத்துமூலமாக கையளித்தார்.

எனினும் உணவு இடைவேளையின் பின் கூடிய சபையின் குறித்த பிரேரணையை விவாத்திற்கு எடுப்பதா என முதல்வர் ஆர்னோட் கோரிக்கை விடுத்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் ஈபிடிபி உறுப்பினர்களும் குழப்பங்களில் ஈடுபட்டனர். தமது பிரேரணையை நிராகரித்திருந்தாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரேரணையை விவாத்திற்கு எடுக்க வேண்டும் என ரெலோ உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அதனை ஏற்க மறுத்த முதல்வர் ஆர்னோல்ட்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கு காலநீடிப்பு வழங்குவதை ஆதரிக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும் அவர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் இந்தப் பிரேரணையை நிறைவேற்றி எதனை வெளிப்படுத்தப்போகின்றீர்கள். இங்கே பல நிலைப்பாடுகளில் பல கட்சிகள் உள்ளன. உங்கள் பிரேரணையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே உங்கள் பிரேரணையை சபைக்கு எடுக்கமாட்டடோம் என்றார்.

அதன்போது குறிப்பிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான பார்த்திபன் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்காதே சர்வதேச விசாரணை வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் பதாதை ஏந்திவாறு நின்றிருந்ததாகவும் ஆனால் இங்கு அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கால அவகாசம் வேண்டும் என கோருவதும் முரண் நிலை என்றும் இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்