நாம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம்-சீமான் அதிரடி

நாங்கள் மற்ற கட்சிகளை போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம், ஆனால் விவசாயிகளை கடனாளியாக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்,

சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பாராளளுமன்ற தேர்தலின் வேட்ப்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தில் பேசும்போது மேலும் தெரிவித்ததாவது ,

பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் எனவும்.
கார் தயாரிக்கும் முதலாளி வாழும் நாட்டில் சோறு தயாரிக்கும் விவசாயி மரணிப்பது பெரிய முரண் என்றும், நாட்டு மக்கள் பசியில்லாமல் இரவில் தூங்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் வேட்பாளர்கள் மோடி, ராகுலால் உறுதி தர முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் “கரும்பு விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு
"ஒரு பைசா லஞ்சம் வாங்கட்டும்.. விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்" என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கர்ஜித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்