அமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை – டிடிவி தெரிவிப்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் மோதுகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு பெட்டி சின்னத்தில், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

மாநிலம் முழுவதும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாகை மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செங்கொடியை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளாகளிடம் பேசிய அவர், நெல்லை, குமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த எனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான் என்றார். இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என்றும் பதிலளித்தார்.

மேலும், மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது, திமுக-வை விமர்சித்த கம்யூனிஸ்டுகள், தற்போது 2 சீட்டுக்காக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக டிடிவி.தினகரன் விமர்சித்தார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தியை பிரதரமராக்குவோம் என கோஷமிடும் கம்யூனிஸ்டுகள், கேரளாவில் காங்கிரசை தோற்கடிப்போம் என பிரச்சாரம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்