கோத்தபாயவுக்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு!

முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் தொட­ரப்­பட்ட வழக்­கி­னைப்­போல் பிரித்­தா­னி­யா­வி­லும் வழக்­கு­க­ளைத் தொடர்­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ள­தாக உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப்­பின் பணிப்­பா­ள­ரும் மனித உரி­மை­கள் செயற்பாட்டா­ள­ரு­மான யஸ்­மின் சூக்கா தெரி­வித்­தார்.

இலங்­கை­யின் முன்­னாள் பாது­காப்பு செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. சித்திரவதைகளை அனு­ப­வித்த நூற்­றுக்கு அதி­க­மா­னோர் பிரிட்டனிலும் புலம்­பெ­யர்ந்து வாழ்­கி­றார்­கள்.

அந்­த­வ­கை­யில் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் பிரிட்­ட­னி­லும் வழக்குகளைத் தொடர்­வ­தற்­கான சாத்தி­யக்­கூ­று­கள் உள்­ள­னவா என லண்­ட­னில் இடம்­பெற்ற ஊடக மாநாட்­டி­னைத் தொடர்ந்து இடம்­பெற்ற நேர்­கா­ண­லில் யஸ்­மின் சூக்­கா­வி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதற்கு பதில் அளிக்கும்­போதே அவர் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

‘நிச்­ச­ய­மாக அதற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ளன. ஏனெ­னில் சித்திரவ­தை­கள் என்­பது பன்­னாட்டு ரீதி­யில் தடை­செய்­யப்­பட்ட குற்­றச் செய­லா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. பிரித்­தா­னி­யா­வி­லும் அமெரிக்கா­வி­லும் இவ்­வாறு வழக்கு தொடர்­வ­தில் உள்ள வித்­தி­யா­சம் என்­ன­வெ­னில் அமெரிக்காவா­னது சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­ன­வர்­களை பாது­காப்­ப­தற்கு என தனி­யான சட்­டம் ஒன்­றினை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அந்த சட்­டத்­தின்­படி வழக்கு தொடர்­ப­வர்­கள் எவ­ராக இருந்­தா­லும் அவர்­கள் அந்த நாட்­டில் அல்லாது வேறு எந்த நாட்­டில் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அவர்­கள் அந்த சட்டத்தின் கீழ் வழக்­கினை தொடர முடி­யும். ஆயி­னும் சித்­தி­ர­வ­தையை செய்­த­வர் மீது அழைப்பாணையை வழங்க முடி­யு­மான பட்­சத்­தில் மாத்­தி­ரமே வழக்கை தொடர முடி­யும்.

பிரிட்­ட­னி­லும் இவ்­வா­றான பல வெற்­றி­க­ர­மான வழக்­கு­கள் நடைபெற்றுள்­ளன. உதா­ர­ண­மாக நேபா­ளத்­தைச் சேர்ந்த கேணல் தரநிலை இரா­ணுவ வீரர் குணால் லாமா என்­ப­வ­ருக்கு எதி­ராக பிரித்தானியாவில் வழக்­குத் தொட­ரப்­பட்டு அவர் பிரித்தானியாவுக்கு வந்­த­போது கைது செய்யப்பட்­டார்.

இறு­தி­யில் போர்க் குற்­றங்­கள் குறித்து அவர் தப்­பித்­துக்­கொண்­டா­லும் அவ­ரது வழக்­கின்­போது ஏரா­ள­மான கேள்­வி­களை வழக்­க­றி­ஞர்­கள் முன்வைத்­தார்­கள். மேலும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பாக அதனை தடுப்பதற்­கான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய கட்­டா­யம் எல்லா நாடுகளுக்­கும் உள்­ளது. அதே­போல் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு பொறுப்பானவர்­களை தண்­டிக்­கும் கடப்­பா­டும் அத­னால் பாதிக்கப்பட்டவர்­க­ளுக்கு இழப்­பீட்­டைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் கடமையும் அந்த நாடு­க­ளுக்கு உள்ளது.

ஆயி­னும் இவ்­வா­றான வழக்­கு­க­ளில் அர­சி­யல் தலை­யீ­டு­கள் இருப்பதனைத் தவிர்க்க முடி­யாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்