தமிழரசுக் கட்சிக்குள் வாரிசு அரசியல்?

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மாவை சேனாதிராஜாவின் மகனைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் சுமந்திரன் அணி சரவணபவன் அணி சிறிதரன் அணி மாவை அணி என நான்கு அணிகளாககப் பிரிந்து தமது அணியைச் சேர்ந்தவரையே இளைஞரணிச் செயலாளராக கொண்டுவரவேண்டும் என மல்லுக்கட்டிவருகின்றனர்.

வெளிநாட்டில் ஓடி ஒழித்துவிட்டு திடீரென அரசியலுக்குள் நுளைக்கப்பட்ட மாவையின் மகனுக்கு இளைஞரணி செயலர் பதவி கொடுப்பது நீண்டகாலமாக கட்சிக்கு விசுவாசமாக ஊரில் இருந்து உழைத்துவரும் இளைஞர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.

யுத்தம் நடைபெற்றபோது சொசுகு வாழ்க்கைகாக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த மாவையின் மகன் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது நாட்டுக்கு அழைக்கப்பட்டு வலிவடக்கு பிரதேசத்தில் போட்டியிட வைக்கப்பட்டார்.

அதனையடுத்து வலி வடக்கில் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்த மீள்குடியேற்ற தலைவர் சஜீவன் உள்ளிட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இந்நிலையிலேயே தனது மகனை இளைஞரணிச் செயலாளராக்கும் முனைப்பு மாவையால் மேற்கொள்ளப்பட்டது.

இது குடும்ப அரசியல் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் எனவும் இப் பதவியினை தமது ஆதரவாளர் ஒருவருக்கே வழங்க வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்