மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை?

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான இன்றுவரையும், மாவை சேனாதிராசாவின் பெயர்மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாலேயே அவர் தெரிவாகவுள்ளார்.

தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 26,27,28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் புதிய தலைவர், செயலாளர் தெரிவும் இடம்பெறவுள்ளது.

தலைவர் பதவியில் மாற்றம் வரலாமென்ற தகவல்கள் வெளிவந்தபோதும், பின்னர், மீண்டும் பதவியில் தொடர மாவை சேனாதிராசா விரும்பியதையடுத்து, அவரது பெயரே மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் விதிமுறைகளிற்கமைவாக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவரின் பெயரை இரண்டு கிளைகள் அல்லது ஆறு ஆயுள்கால உறுப்பினர்கள் பரிந்துரைக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றாகும்.

இந்தநிலையில் ஆறு ஆயுள்கால உறுப்பினர்கள் மாவை சேனாதிராசாவின் பெயரை பரிந்துரைத்து, கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகத்திடம் நேற்று கையளித்தனர். இன்று விண்ணப்பங்களிற்கான கடைசி தினமாக இருந்த போதும் வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.இதனால் போட்டியின்றி மீண்டும் மாவை சேனாதிராசாவே தமிழரசுக்கட்சியின் தலைவராகவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்