மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை சந்திக்க நேரிடும் மகிந்த கடும் எச்சரிக்கை!

எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

தொடரும் வன்முறைகளை அடுத்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,

“1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை இனக் கலவரங்கள் தான், நாட்டை 30 ஆண்டு காலப் போருக்குள் தள்ளியது. அந்த அனுபவங்களை நாங்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.

அரசாங்கம் தமது பொறுப்பை நிறைவேற்றாவிடினும், மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் சட்டத்தை தமது கையில் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பொறுமையாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டும். மிகவும் கடினமானது என்ற போதும், உங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த தீவிரவாதத்தையும், இனவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்