அதிமுகவின் ஆட்சி தொடருமா?தினகரனின் கையில் அஸ்திரம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர் வேண்டும் என்றால் டிடிவி தினகரன் மனது வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது.

கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முதல் நாளோடு தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் 18 மற்றும் மே 19ம் தேதி தேர்தல் நடந்தது.

இந்த் நிலையில் தமிழகத்தில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி 14 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. அதாவது திமுக பெரும்பாலும் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கருத்துக் கணிப்பில், அதிமுகவுக்கு வெறும் 3 தொகுதிகள்தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக குறைந்தது 5 இடங்களில் வெல்ல வேண்டும். அப்படி வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்.

அதனால் அதிமுக ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இதுதான் அதிமுகவை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. மீதம் இருக்கும் 5 இடங்களில் 4ல் அமமுக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிப்படுகிறது.

இதனால் தற்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர் வேண்டும் என்றால் டிடிவி தினகரன் மனது வைக்க வேண்டும். இவர் யாருக்கு ஆதரவு அளிக்கிறாரோ அவர்தான் ஆட்சி அமைக்க முடியும். இவர் ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்