தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி

தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு நீதிகோரி பதாகை கவனயீர்ப்பு நிகழ்வும் , வணக்க நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாகைகளில் பல்லின மக்களுக்கு இச் செய்தியை கொண்டுசெல்லும் முகமாக வாசகங்கள் யேர்மன் மொழியிலும் , ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டது. இளையோர்களால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாக நிகழ்வு நிறைவுற்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்