சீனா – சுவிஸை தொடர்ந்து பயண எச்சரிக்கையை தளர்த்தியது இந்தியா!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை இந்தியா தளர்த்தியுள்ளது.

புது டில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மற்றும் பாடசலைகள் மீண்டும் திறக்கப்பட்டமை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இலங்கைக்கு பயணம் செய்யும் இந்தியர்கள் கவனமாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் இலங்கையில் எந்தவொரு உதவி தேவைப்படினும் இந்தியர்கள், கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம், கண்டி உள்ள உதவி உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள தூதரகங்கள் ஆகியவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தமுடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தொலைபேசி இலக்கங்களை+ 94-772234176 + 94-777902082 + 94-112422788 + 94-112422789 அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக சீனாவும் சுவிட்சர்லாந்து ஜேர்மனி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கைகளை தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்