தவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்!

சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில். ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் பற்றி வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனுக்களின் தொகுப்புபை புத்தகமாகி வெளியிட்டுபேசியிருந்தார்/

இதில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு தேச துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது.அதன் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது

காலை 10.40க்கு நீதிபதியின் முன் நூற்றுக்குமேட்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்டச் செயலாளர்கள் புடைசூழ
வைகோ நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தார்.மன்றமே அமைதியானது.
‘உங்கள் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார் நீதிபதி சாந்தி. இதைக் கேட்டு வழக்கறிஞர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

, ”என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ இப்போதே கொடுத்துவிங்கள்” என்றார் வைகோ

“ஒருவருடம் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று தண்டனையை மட்டும் வாசித்துவிட்டு தீர்ப்பின் பிரதியை வைகோவின் வழக்கறிஞர்களிடம் கொடுத்தார்.

உடனடியாக தண்டனைப் பணம் கட்டப்பட்டு தீர்ப்பினையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஜாமீன் கொடுக்கபட்டு 30 நாள் தள்ளிவைக்கப்பட்டது.

தீர்ப்பை முழுமையாக வசித்த வைகோ ‘தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கி கருணை காட்டுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் கேட்டுக் கொண்டபடி…’ என்ற பொருள் படும் வாசகத்தை தீர்ப்பில் பார்த்துவிட்டார்

உடனே கையில் தீர்ப்பு பிரதியை வைத்துக் கொண்டு நீதிபதியிடம், ‘அம்மா… நாங்கள் எந்த இடத்திலும் எனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கும்படி உங்களிடம் ஒரு நாளும் கோரிக்கை வைக்கவில்லையே… வாதாடவில்லையே.. ஆனால் தீர்ப்பில் நான் குறைந்த பட்ச தண்டனை கேட்டதாக குறிப்பிட்டுள்ளீர்களே…? இது நீதிபதியின் எண்ணத்தில் இருக்கும் விஷத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது’ என்று சொன்னதும் நீதிபதி சாந்தி அதிர்ச்சியாகிவிட்டார். ஏனெனில் நீதிமன்றத்தில் இதுவரை யாரும் இப்படி அவரைக் கேள்வி கேட்டதில்லை.

உடனடியாக சில ஆவணங்களை எடுத்துப் பார்த்தவர், ‘ஆமாம்… நீங்கள் குறைந்த பட்ச தண்டனை தர சொல்லி கேட்கவில்லை. நான் உடனடியாக தீர்ப்பைத் திருத்திவிடுகிறேன்’ என்று சொல்லி அந்த சர்ச்சைக்குரிய வாசகங்களை தன் கைப்பட அழித்து அதில் தன் கையெழுத்தையும் இட்டு நீதிமன்றப் பணியாளர்களிடம் கொடுத்து தனது தவறையும் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பை அறிந்ததும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளம் பேர் சிறப்பு நீதிமன்றத்தின் முன் கூடினார்கள்.கட்சி தலைமையகம் சென்ற வைகோ இப்போது ஆலோசனை நடத்திவருகிறார், இதன்போது பல்வேறு மாற்று கட்சி இயக்க தலைவர்கள் வைகோவை சந்தித்து வருகின்றனர்.

அதேவேளை இரு வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்தான் வகிக்கும் பதவியை இழக்கும் நிலையோ, தேர்தலில் போட்டியிட முடியாத நிலையோ ஏற்படும் என்றும் ஆனால் மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதால் ராஜ்யசபாவுக்கு அவர் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது அனால் வேட்பு மனு தாக்கலில் இந்த வழக்கு விவரத்தையும் சேர்க்க வேண்டும் என்று அறிகமுடிகிறது.

மேலும் ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்பட்டது சரியானது அல்ல என்பது மேல் முறையீட்டில் உறுதிப்படுத்தப்படும். எனவே வைகோவுக்கு இந்தத் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தாது”மதிமுக முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்