அதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி

2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு என, அவரது சார்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

‘மிலேனியம் சவால் நிதிய உடன்பாடும் கூட, அதிபர் தேர்தல் நடத்தப்படும் வரை தாமதிக்க வேண்டும்.

தற்போது செய்து கொள்ளப்பட்டுள்ள கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு செவைகள் உடன்பாட்டை பின்பற்ற வேண்டியது கடப்பாடாக இருந்த போதும், சோபா மற்றும் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடுகளை நிறுத்தி வைக்க முடியும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த இரண்டு உடன்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் சிறிசேன கூறியுள்ளார்.” எனவும் அவர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்