20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு!

இராமநாதபுரம் ஜீலை 25

கார்கில் வெற்றியை நினைவுகூறும் 20வது ‘விஜய் திவாஸ்’ தினம் இன்றும் நாளையும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக உச்சிபுளி அருகேயுள்ள பருந்து விமான படைக்கு சொந்தமான விமானங்களை காண்பதற்காக பொதுமக்கள் அனுமதிக்கபட்டனர்.

ஜூலை 26, 1999ல் கார்கிலில் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ வெற்றியை அறிவித்தது. பாகிஸ்தானிய படைகளையும், பயங்கரவாதிகளையும் விரட்டி அடித்து ஜம்மு காஷ்மீரின் கார்கிலில் அனைத்து பகுதிகளையும் தன்வசப்படுத்தியது. அன்றிலிருந்து இந்நாள் ‘விஜய் திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 500 இந்திய ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் தரப்பில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் விஜய் வெற்றி ஒவ்வொரு ஆண்டும் ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த 20 வது ஆண்டு நினைவு தினத்தை கொண்டாவும் வகையில் உச்சிபுளி அருகே உள்ள பருந்து விமான படைக்கு சொந்தமான விமானங்களை பொது மக்கள் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பார்வையிட விமானபடை தளம் அனுமதி அளித்தது.

இதனையடுத்து திரளான பொது மக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் உச்சிபுளி விமான தளத்தில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து விமானங்களை கண்டு ரசித்தனர். அப்போது விமான படை வீரர்கள் விமானங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மறுமொழி இடவும்