விபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் தேசிய பற்றாளருமான ஏரம்பு இரத்தினவடிவேல் விபத்தில் சிக்கி உயிரிளந்துள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏரம்பு இரத்தினவடிவேல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார்.

தாயகத்தின் அத்தனை போராட்டங்களிலும் கலந்துகொள்ளும் இவர் கேப்பாப்பிலவு நிலமீட்பு போராட்டத்தில் அந்த மக்களோடு இரவு பகலாக நின்று போராடியவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களது அனைத்துப்போராட்டங்களிலும் பங்கெடுத்தவர் கடந்த மாவீர்ர் நாளிலே தேவிபுரம் மாவீர்ர் துயிலும் இல்லத்தினை அடையாளப்படுத்தி மாவீர்ர் நாள் நினைவேந்தல் சிறப்புற நடைபெற அயராது உழைத்தவர் தனது பிள்ளைகளின் நிதியுதவி மூலம் ஏழை மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாய் நின்றவர் தூயகரங்கள் என்னும் அமைப்பை உருவாக்கி முன்னாள் போராளிகள் ஏழை மக்கள் போன்றவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் பல வழங்கியவர் தன்னுடைய 72 வயதிலும் இரவு பகல் பாராது தமிழ்தேசத்தின் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்